இறைச்சி கடைக்காரர்களுடன் ஆலோசனை கூட்டம்
அரக்கோணத்தில் இறைச்சி கடைக்காரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அரக்கோணம்
அரக்கோணம் நகராட்சியில் ஆடு, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்துவது குறித்து இறைச்சி கடைக்காரர்களுடன் ஆலோசனை கூட்டம் மளிகை வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடந்தது.
சுகாதார அலுவலர் மோகன் தலைமை தாங்கினார். நகரமன்ற துணைத்தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் கலந்து கொண்டு கோழி, ஆடு, மாட்டு இறைச்சி கடை உரிமையாளர்கள் கடை அருகே டிரம் வைத்து அதில் கழிவுகளை சேகரித்து நாள்தோறும் நகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
கழிவுகளை ஏரி மற்றும் சாலையோர இடங்களில் கொட்டாமல் பாதுகாப்பாகவும் தூய்மையான நகரமாக வைத்துக்கொள்ள வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.
நகராட்சி சட்டங்களை மீறி இறைச்சி கழிவுகளை ஏரி மற்றும் சாலையோரம் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இறைச்சி கடைகளுக்கு நகராட்சி உரிமம் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். உரிமம் வாங்காமல் கடை நடத்த கூடாது என்றார்.
கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர் சுதாகர், இறைச்சி கடை உரிமையாளர்கள், கடைக்காரர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.