விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம்
மேற்கு ஆரணியில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆரணி
மேற்கு ஆரணி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை தொழில்நுட்பம் மேலாண்மை முகமை சார்பில் மேற்கு ஆரணி வட்டார விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூட்டம் நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குனர் செல்லதுரை தலைமை தாங்கினார்.
அப்போது அவர், வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் மாநில திட்டங்களான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், வேளாண் இடுபொருட்கள் மற்றும் திருச்சியில் நடைபெறும் வேளாண் சங்கம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி பேசினார்.
கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் கீதா, தோட்டக்கலை அலுவலர் மோனிகா, கால்நடை உதவி மருத்துவர் அன்னலட்சுமி, வேளாண்மை அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் நாராயணன், வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு தலைவர் பாலமுருகன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார், உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் பாஸ்கரன் பிரேம்குமார், மேற்கு ஆரணி வட்டார விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.