வடமாநில தொழிலாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்


வடமாநில தொழிலாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
x

வடமாநில தொழிலாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்ட மாவட்ட காவல் துறை நிர்வாகத்தின் சார்பில் வடமாநில தொழிலாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் பொதுவெளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமை தாங்கினார். பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மிக முக்கியமாக தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றி அதிகாரிகள் கேட்டு அறிந்தனர். இதற்கு தொழிலாளர்கள் தெரிவிக்கையில், நாங்கள் எங்களது சொந்த ஊரில் இருப்பது போல் அன்புடனும், நட்புடனும் அருகில் இருக்கும் தமிழ் இன மக்கள் பழகி வருகிறார்கள். இதனால் நாங்கள் பாதுகாப்பு, அச்சுறுத்தல் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. காவல் துறை அதிகாரிகள் எங்களது நலனில் அக்கறை காட்டியதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என கூறினர்.

1 More update

Next Story