கனிமவள பாதுகாப்பு குறித்த ஆலோசனை


கனிமவள பாதுகாப்பு குறித்த ஆலோசனை
x

கனிமவள பாதுகாப்பு குறித்த ஆலோசனை நடந்தது.

கரூர்

தமிழ்நாடு கனிமவள பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் காந்திகிராமத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்டத்தலைவர் தேக்கமலை தலைமை தாங்கினார். செயலாளர் சம்பத், துணை செயலாளர் சக்திவேல் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு புறம்போக்கு கல்குவாரிகளை உடனடியாக ஏலத்திற்கு கொண்டு வர வேண்டும், கரூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் இயங்கும் கல் குவாரிகளை மூட வேண்டும், ராட்ச எந்திரங்களை கொண்டு பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதால் விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், குடி நீர் பிரச்சினை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், துணை தலைவர் முல்லை அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story