கிரானைட் குவாரி அமைப்பது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம்


கிரானைட் குவாரி அமைப்பது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம்
x

கொடைக்கல் கிராமத்தில் கிரானைட் குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

கொடைக்கல் கிராமத்தில் கிரானைட் குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

கருத்து கேட்பு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே உள்ள கொடைக்கல் கிராமத்தில், தமிழ்நாடு கனிம நிறுவனம் சார்பாக கருப்பு கிரானைட் குவாரி அமைப்பது குறித்து சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு கனிமவள நிறுவனம் கருப்பு கிரானைட் சுரங்கம் அமைக்கப்படுவது, அதனுடைய முழு செயல்பாடு குறித்து தமிழ்நாடு கனிம நிறுவன துணை மேலாளர் (சென்னை) கணேசன் பொதுமக்களுக்கு விளக்கினார்.

குடியிருப்புகளுக்கு பாதிப்பின்றி

அப்போது கொடைக்கல் கிராமத்தில் தமிழ்நாடு கனிம நிறுவனம் சார்பில் ஏற்கனவே மூன்று குவாரிகள் இயங்கி வருகின்றது. தற்போது புதிதாக ஒரு குவாரி தொடங்க இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. குவாரி அமைக்கப்படுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஆணையின்படி பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதன் அறிக்கையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த புதிய குவாரி ஒரு லட்சம் கன அடி அளவிற்கு செயல்படும். குவாரியில் கருப்பு கல் வெட்டி எடுக்கும் பொழுது புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி, மாசு படாத அளவிற்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து, கிராம மக்கள் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் கல் வெட்டி எடுப்பது குறித்தும், இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் கிராமத்தின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் சதீஷ், ஊராட்சி செயலாளர் அசோகன், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story