வாக்காளர் பட்டியல் திருத்த ஆலோசனை கூட்டம்


வாக்காளர் பட்டியல் திருத்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:45 PM GMT)

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தென்காசியில் அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம்-2024 தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகிய கட்சிகளின் சார்பில் அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தற்போது உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு இணங்க 1,500 வாக்காளர்களுக்கு அதிகமான வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து வாக்குச்சாவடி மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டது. கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி கலெக்டர் லாவண்யா, தேர்தல் தனி தாசில்தார் ஹென்றி பீட்டர் மற்றும் தாசில்தார்கள், தனித்துணை தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.


Next Story