மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 19 April 2023 1:27 AM IST (Updated: 19 April 2023 4:00 PM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாட்டில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒரத்தநாடு மின்வாரிய கோட்டத்தில் மாதந்தோறும் 3-வது வியாழக்கிழமைகளில் மின் நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக் கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒரத்தநாடு மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே ஒரத்தநாடு, ஊரணிபுரம், திருவோணம், வடசேரி, பாப்பாநாடு, உறந்தைராயன்குடிக்காடு, ஒக்கநாடு கீழையூர், பின்னையூர், பொய்யுண்டார்கோட்டை, கண்ணுகுடி மேற்கு, மேலஉளூர், சாலியமங்கலம், மாரியம்மன்கோவில், அம்மாப்பேட்டை, சூரக்கோட்டை மற்றும் பனையக்கோட்டை ஆகிய பிரிவு அலுவலகங்களை சேர்ந்த பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story