மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x

ஒரத்தநாட்டில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒரத்தநாடு மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் 3-வது வியாழக்கிழமைகளில் இக்கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் குறைகளை தீர்க்கும் வகையில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மே மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. எனவே ஒரத்தநாடு, ஊரணிபுரம், திருவோணம், வடசேரி, பாப்பாநாடு, உறந்தராயன்குடிக்காடு, ஒக்கநாடு கீழையூர், பின்னையூர், பொய்யுண்டார்கோட்டை, கண்ணுக்குடி மேற்கு, மேஉளூர், சாலியமங்கலம், மாரியம்மன்கோவில், அம்மாப்பேட்டை, சூரக்கோட்டை, பனையக்கோட்டை ஆகிய பிரிவு அலுவலகங்களை சேர்ந்த பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story