மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

தஞ்சாவூர்


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கும்பகோணம் வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மின் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கும்பகோணம் ராஜன் தோட்டம் மின்வாரிய அலுவலகத்தில் தஞ்சாவூர் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கும்பகோணம் வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட செட்டி மண்டபம், திப்பிராஜபுரம், நாச்சியார் கோவில், செம்மங்குடி, திருவிடைமருதூர், ஆடுதுறை, திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, கதிராமங்கலம், பந்தநல்லூர், கோணுளாம்பள்ளம், குறிச்சி, திருப்பனந்தாள், சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான தங்களது குறைகளை நேரில் வந்து தெரிவித்து பயனடையலாம். இந்த தகவலை கும்பகோணம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் கலையரசி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story