சோலூர்மட்டம் அரசுப் பள்ளியில் நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு


சோலூர்மட்டம் அரசுப் பள்ளியில் நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு
x

சோலூர்மட்டம் அரசுப் பள்ளியில் நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மூலம் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளிடையே நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகள் தோறும் மாணவ, மான்விகளைக் கொண்ட நுகர்வோர் குடி உரிமை மன்றங்கள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று சோலூர்மட்டம் அரசுப் பள்ளியில் நுகர்வோர் குடி உரிமை மன்றம் துவக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கிற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் பசுவராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு, பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், நீலகிரி மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்துக் கொண்டு நுகர்வோரின் சட்டங்கள் குறித்து விளக்கிப் பேசி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளித்தனர். இந்த கருத்தரங்கில் ஏராளமான மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.


Next Story