பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதல்; 6 பேர் படுகாயம்
ஆம்பூர் அருகே பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர்
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 45), தனியார் 'ஷூ' கம்பெனியில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று பூபாலன் வேலைக்கு ஆட்களை அழைத்து வருவதற்காக ஆம்பூர் டவுன் சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை நிறுத்தியிருந்தார்.
தொடர்ந்து 'ஷூ' கம்பெனி தொழிலாளர்கள் சிலர் பஸ்சில் ஏறிக்கொண்டிருந்தனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சென்ற கன்டெய்னர் லாரி திடீரென பஸ் மீது மோதியது.
இதில் பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story