கன்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி


கன்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
x

ஆற்காட்டில் கன்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த வண்டிகல் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 23). இவரின் தம்பி மதன்குமார். இருவரும் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் ஷூ நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

அண்ணன், தம்பி இருவரும் ஒரு மோட்டார்சைக்கிளில் ராணிப்பேட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆற்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை அடுத்த புதிய மேம்பாலம் அருகில் சென்ற போது, அந்த வழியாக வந்த ஒரு கன்டெய்னர் லாரி அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிளின் பின்னால் மோதியது.

அதில் சம்பவ இடத்திலேயே சுபாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மதன்குமார் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுபாஷின் பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற கண்டெய்னர் லாரி மற்றும் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story