ஸ்ரீபெரும்புதூர் அருகே சூறாவளி காற்றால் சாய்ந்து விழுந்த கன்டெய்னர்கள்


ஸ்ரீபெரும்புதூர் அருகே சூறாவளி காற்றால் சாய்ந்து விழுந்த கன்டெய்னர்கள்
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே சூறாவளி காற்றால் கன்டெய்னர்கள் சாய்ந்து விழுந்தது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்றுடன் அரை மணி நேரம் லேசான மழை பெய்தது. பலத்த வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகத்தில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த 3 கன்டெய்னர் லாரிகள் அடுத்தடுத்து பக்கவாட்டில் சாய்த்து விழுந்தது. நிறுத்தப்பட்டிருந்த லாரியில் டிரைவர் இல்லாததாலும், லாரியில் பொருட்கள் ஏதுமின்றி காலியாகவும் உயர்ந்த நிலையில் இருந்ததால் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மேலும் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி கவிழ்ந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் சுங்குவார் சத்திரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story