கோவை குளங்களை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்புக்கு நிரந்தர தீர்வு எப்போது?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கோவை குளங்களை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்புக்கு நிரந்தர தீர்வு எப்போது?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் குளங்களை மாசுப்படுத்தும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது என்கிற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் குளங்களை மாசுப்படுத்தும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது என்கிற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

ஆகாயத்தாமரைகள்

கோவை மாநகராட்சி பகுதியில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், செல்வ சிந்தாமணி குளம், முத்தண்ணன் குளம், உள்ளிட்ட குளங்கள் வருகின்றன. இந்த குளங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்களை ஆக்கிரமித்து வளர்ந்துஇருந்த ஆகாய தாமரைகள் நவீன எந்திரங்கள் மூலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. மேலும் குளத்தை சுற்றி நடைபாதைகள், பூங்கா, சைக்கிள் செல்ல தனி பாதை, சிறுவர்கள் விளையாடி மகிழ பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், பொதுமக்கள் இயற்கை அழகை காணும் வகையில் காட்சி கோபுரங்கள், அலங்கார விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குளங்களிலும் ஆகாய தாமரைகளை அகற்ற பலலட்சம் ரூபாய் மாநகராட்சியால் செலவழிக்கப்படுகிறது.

நிரந்தர தீர்வு

ஆனால் ஆகாய தாமரை அகற்றப்பட்ட சில மாதங்களில் மீண்டும் மீண்டும் வளர்ந்து குளத்தை ஆக்கிரமித்து விடுகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூறியதாவது:-

கோவை குளங்கள் ஸ்மார்ட் சிட்டியில் மேம்படுத்தப்படுவது முக்கியமான ஒன்றுதான். ஆனால் ஆகாய தாமரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாமல் உள்ளனர். ஊட்டி ஏரியில் நிறைந்து காணப்பட்ட ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில் தினமும் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் அங்கு மீண்டும் ஆகாய தாமரை வளராமல் தடுக்கப்பட்டு உள்ளது. இதைப்போல் கேரளாவில் ஆகாய தாமரைகள் வளர்வதை கட்டுப்படுத்த சில தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். எனவே கோவை மாநகராட்சி அதிகாரிகளும் குளங்களை ஆக்கிரமித்து, மாசு படுத்தும் ஆகாய தாமரைகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் குளங்களை அழகுபடுத்தி எந்த ஒரு பயனும் இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story