கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம்


கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 July 2023 2:00 AM IST (Updated: 27 July 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

பதவி உயர்வு கோரி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்.

நீலகிரி

ஊட்டி

கூட்டுறவுத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து நிலையில் உள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டியில் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ெசங்கல்பட்டு துணை பதிவாளர், ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கிறார். அவரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். பால் கூட்டுறவு தணிக்கை மற்றும் வீட்டு வசதி துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை உடனே பணி விடுப்பு செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பி வலியுறுத்தினர். இதில் நிர்வாகிகள் அய்யனார், தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story