தொடர் விடுமுறை எதிரொலி: தேனி கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தேனி கும்பக்கரை அருவியில் இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
தேனி,
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி இயற்கை எழில் சூழ மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படுகிறது. தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. அதோடு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளும் விடப்பட்டுள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
Related Tags :
Next Story