தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள்: திருப்பூரில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு...!


தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள்: திருப்பூரில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு...!
x

திருப்பூரில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

திருப்பூர்,

கோவையில் பல்வேறு இடங்களில், பாஜக அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடு, கார் மற்றும் கடைகளுக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும், தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு 17 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகின்றது.


Next Story