மருத்துவமனை ஆய்வின் போது தொடர் மின்வெட்டு - பாதியில் திரும்பிய அமைச்சர்


x

மருத்துவமனை ஆய்வின் போது தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் ஆய்வை பாதியில் முடித்துவிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

தர்மபுரி,

மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் ஆய்வை பாதியில் முடித்துவிட்டு அமைச்சர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. செல்போன் வெளிச்சத்தில் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

40 நிமிடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட முறைகள் மின்வெட்டு ஏற்பட்டதன் காரணமாக ஆய்வை பாதியில் முடித்துவிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே.மணி, கலெக்டர் சாந்தி உள்ளிட்டோரும் ஆய்வின் போது உடனிருந்தனர்.

1 More update

Next Story