குளித்தலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம்


குளித்தலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம்
x

குளித்தலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு கூட்டம்

கரூர்

செயற்குழு கூட்டம்

கரூர் மாவட்டம், குளித்தலையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் குளித்தலை வட்டார கிளையின் வட்டார செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் பழனிவேலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் கூட்டணி நடைமுறை குறித்து சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் 2009-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், ஊக்க ஊதிய உயர்வை வழங்குதல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் முதல்-அமைச்சருக்கு கோரிக்கையாக தபால் அட்டையில் எழுதி அனுப்புதல், மார்ச் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை கோரிக்கை அட்டைகளை கருப்பு பட்டையில் எழுதி அணிந்து வருதல்,

உண்ணாவிரத போராட்டம்

மார்ச் 18-ந்தேதி மாவட்ட தலைநகரில் உண்ணாவிரத போராட்டம் போன்ற மாநில அமைப்பின் தொடர் போராட்டத்தில் குளித்தலை ஒன்றிய இப்பேரியக்க 186 உறுப்பினர்களும் கலந்து கொள்வவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக வட்டாரச் செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பிரதிநிதியுமான மணிகண்டன் வரவேற்றார். முடிவில் வட்டாரப் பொருளாளர் மனோகரன் நன்றி கூறினார்.


Next Story