தொடர்ந்து கஞ்சா விற்பனை: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோயம்புத்தூர்

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காசிராஜன் (வயது 35) மற்றும் முருகசாமி (32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கலெக்டர் சமீரனிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரின் உத்தரவின்பேரில் காசிராஜன், முருகசாமி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

1 More update

Next Story