சென்னையில் இரவு நேர தொடர் மின்வெட்டு - ஆத்திரத்தில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்


சென்னையில் இரவு நேர தொடர் மின்வெட்டு - ஆத்திரத்தில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x

சென்னை அம்பத்தூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை அம்பத்தூர் தொகுதிக்கு உள்பட்ட கள்ளிக்குப்பம், புதூர், கொரட்டூர் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின்தடை குறித்து தொலைபேசியில் அழைத்தால் அலுவலர்கள் பதில் அளிக்கவில்லை என்று கூறி, கள்ளிகுப்பத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சில மணி நேரம் போராட்டம் நீடித்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story