கொடைக்கானலில் தொடர்மழை; அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்


கொடைக்கானலில் தொடர்மழை; அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்
x

கொடைக்கானலில் உள்ள நீரோடைகள் மற்றும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

திண்டுக்கல்,

தமிழக பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் தற்போது ஓரளவு குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மழைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீரோடைகள் மற்றும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த அருவிகளின் முன்பாக குடும்பத்துடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.


Next Story