பொக்லைன் எந்திர உரிமையாளரை தாக்கிய ஒப்பந்ததாரர் கைது


பொக்லைன் எந்திர உரிமையாளரை தாக்கிய ஒப்பந்ததாரர் கைது
x

திண்டிவனத்தில் பொக்லைன் எந்திர உரிமையாளரை தாக்கிய ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கோரையாறு பகுதியை சேர்ந்தவர் தங்கராசு மகன் சக்தி முருகன்(வயது 30). இவரிடம் திண்டிவனம் ரோசணை ஆஸ்பிட்டல் ரோடு பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ராஜசேகர்(35) என்பவர் பொக்லைன் எந்திரங்களை வாடகைக்கு எடுத்து சென்று 3 மாத வாடகையை கொடுத்த பின்னர் வாடகை பணத்தை தரவில்லை என கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட சக்தி முருகனை ராஜசேகர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.


Next Story