ஆன்லைன் ஏலத்தின் மூலம் ரூ.83 கோடிக்கு ஒப்பந்தங்கள் - தெற்கு ரெயில்வே தகவல்


ஆன்லைன் ஏலத்தின் மூலம் ரூ.83 கோடிக்கு ஒப்பந்தங்கள் - தெற்கு ரெயில்வே தகவல்
x

கோப்புப்படம்

ஆன்லைன் ஏலத்தின் மூலம் ரூ.83 கோடிக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வே அதன் 6 மண்டலங்களில் உள்ள ரெயில்வே தொடர்பான சேவைகளை இணையவழி ஏலத்தின் மூலம் ரூ.82.80 கோடி மதிப்பிலான 151 ஒப்பந்தங்கள் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் வாகன நிறுத்தம், பார்சல் இடங்கள், விளம்பரம், ஏசி காத்திருப்பு அறைகள், கட்டண கழிப்பிடம் போன்றவற்றுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 15-ந் தேதி நடைபெற்ற இணையவழி ஏலத்தின் மூலம் சேலம் மண்டலத்தில் ரூ.23.69 கோடி மதிப்பிலான 53 ஒபந்தங்களும், சென்னை மண்டலத்தில் ரூ.28.09 கோடி மதிப்பிலான 20 ஒபந்தங்களும், மதுரை மண்டலத்தில் ரூ.13.40 கோடி மதிப்பிலான 45 ஒப்பந்தங்களும், திருச்சி மண்டலத்தில் ரூ.8.32 கோடி மதிப்பிலான 18 ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இணையவழி ஏலங்களில் நாடு முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள், நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் கலந்து கொள்வதால் அதிக போட்டி ஏற்பட்டு ரெயில்வேக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story