கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறைகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயனாளிகள் தேர்விற்கான இணையவழி பதிவேற்றம் இரு கட்டங்களாக அந்தந்த ரேஷன் கடை அமைந்துள்ள பகுதிகளிலேயே நடைபெற உள்ளது.
முதற்கட்டம் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந்் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்திற்கான மனுக்கள் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கே வந்து சேர்க்கப்படும். மனு பெறுதல், விண்ணப்பித்தல், பதிவேற்றம், தகுதி மற்றும் தகுதியின்மை குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவ்வபோது தீர்த்து வைக்கும் பொருட்டு கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட உள்ளன.
கட்டுப்பாட்டு அறைகள்
அவற்றின் தொலைபேசி எண்கள் வருமாறு:-
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம்-
04172 - 272212.
தாலுகா அலுவலகங்கள்
வாலாஜா: 04172 - 299808, ஆற்காடு: 04172 - 235568, சோளிங்கர்: 04172 - 290800, கலவை: 04173 - 290031, நெமிலி: 04177- 290275, அரக்கோணம்: 04177 - 236360.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அந்தந்த வட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு தொலைபேசி எண்களையோ அல்லது கலெக்டர் அலுவலக தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம். இந்த கட்டுப்பாட்டு அறைகள் வருகிற 18-ந் தேதி முதல் இயங்கும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.