அருந்ததியர் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம்- சீமான் ஆஜர்


அருந்ததியர் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம்- சீமான் ஆஜர்
x
தினத்தந்தி 11 Sept 2023 11:10 AM IST (Updated: 11 Sept 2023 11:12 AM IST)
t-max-icont-min-icon

சீமான் ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி மாலதி முன் ஆஜராகியுள்ளார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அருந்ததியர் மக்கள் குறித்து தவறாக பேசியதாக சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் செப்டம்பர் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளைய போலீசார் சம்மன் அனுப்பினர். அந்த சம்மனை சீமான் பெற்றுக்கொண்டதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி மாலதி முன் ஆஜராகியுள்ளார்.


Next Story