பட்டாசு வெடித்ததால் தகராறு:பிணத்துடன் சாலை மறியல்:தேனி அருகே பரபரப்பு
தேனி அருகே பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தகராறால் பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி அருகே பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றார். ஊர்வலத்துக்கு முன்பாக சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது ஒரு கடைக்காரர் தனது கடை முன்பு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால், அவருடன் சிலர் வாக்குவாதம் செய்தனர். சிறிது நேரத்தில் அங்குள்ள இருதரப்பு மக்களிடம் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து ஒரு தரப்பினர் பிணத்தை சங்ககோணாம்பட்டி பிரிவு அருகே சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஊர் முக்கியப் பிரமுகர்கள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு பிணத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்்பட்டது.