சாமியாரின் உருவபொம்மை எரிப்பு


சாமியாரின் உருவபொம்மை எரிப்பு
x
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உத்தரபிரதேச சாமியார் உருவ பொம்மையை எரித்து பாப்பிரெட்டிப்பட்டியில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பையர்நத்தம் பஸ் நிறுத்தம் அருகில் சாமியார் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். சாமியாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் பையர் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா குப்புசாமி, தர்மபுரி வடக்கு ஒன்றிய செயலாளர், மாது, பொதுக்குழு உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர் தாமோதிரன், துணை அமைப்பாளர் சுஜிர்த்சதாசிவம், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன். ஒன்றிய துணை செயலாளர் சாதிக் செரிப், செல்லதுரை, ராம்குமார், கிளை செயலாளர்கள் வா.விஜயன், பூகார வெங்கடேசன், மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story