மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா


மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
x

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 31-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி தாளாளர் டாக்டர் ரஹ்மத்து நிசா அப்துர்ரஹ்மான் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.கல்லூரியின் செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்புரை வழங்கி ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் தமிழக அரசின் மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராக் கலந்துகொண்டு இளநிலைப்பிரிவில் 587, முதுநிலைப்பிரிவில் 83, ஆய்வியல் நிறைஞர் பிரிவில் 7 உள்பட 677 மாணவிகளுக்கு பட்டமும் 63 மாணவிகளுக்கு வெள்ளிப் பதக்கங்களும் வழங்கினார்.

விழாவில் மதுரை கிரசெண்ட் பெண்கள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஷெரிபா அஜீஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தொழில்முனைவோர் இயக்குனர் ரோஸி பெர்ணான்டோ, தேர்வு நெறியாளர் முத்து மாரீஸ்வரி, பேராசிரியர் விசாலாட்சி மற்றும் பல்வேறு துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவிகள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் சேக் தாவூத் கான் மற்றும் உள்தர உத்திரவாதக் குழுவினரும் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story