சி.எம்.அண்ணாமலை கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சோளிங்கர் அருகே உள்ள சி.எம்.அண்ணாமலை கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கல்பட்டு அருகே உள்ள சி.எம்.அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தமிழரசன், கல்லூரி இயக்குனர் தமிழ்ச்செல்வி, கல்லூரி இணை இயக்குனர் ஹரிஷிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செந்தில் ராஜேஸ்வரி வரவேற்றார்.
இதில் ெசன்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இளங்கோவன் வெள்ளைச்சாமி மற்றும் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு 161 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினர்.
விழாவில் தி.மு.க. நகர செயலாளர் கோபி, ஒன்றியக்குழு உறுப்பினர் செங்கல்நத்தம் பிச்சாண்டி, நகராட்சி உறுப்பினர்கள் சிவானந்தம், அருணாதி, கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.






