குன்னூர் பேருந்து கவிழ்ந்து விபத்து: கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்
குன்னூரில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
"நீலகிரி,
தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்த நிலையில், பயணிகள் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பேருந்து விபத்துக்குள்ளானதற்கு இரங்கள் தெரிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;
"நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிர்கள் பறிபோனது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.