குன்னூர்: இரவில் சர்வ சாதாரணமா உலா வரும் சிறுத்தையால் மக்கள் அச்சம்
குன்னூரில் இரவு நேரத்தில் கிராம பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குன்னூர்,
குன்னூரில் இரவு நேரத்தில் கிராம பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் குன்னூரின் டைகர் ஹில் பகுதியில் இரவு நேரத்தில் சர்வ சாதாரணமாக சாலையில் உலா வந்த சிறுத்தையை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி அச்சத்துடன் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story