குன்னூர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
குன்னூர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆலயமாக உள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் ஜூன் மாதத்தில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கமாகம்.
இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலம் ஆலயம் வரை நடத்தப்பட்டு கொடி கொண்டு வரப்பட்டது. குன்னூர் மவுண்ட் பிளசண்ட் புனித சகாய மாதா ஆலய பங்குத்தந்தையும் குன்னூர் வட்டார முதன்மை குருவுமான ரொசாரியோ, புனித அந்தோணியார் திருத்தல பங்கு தந்தை ஜெயக்குமார், உதவி பங்கு தந்தை ஆன்டோ மெல்டாஸ் ராக் ஆகியோர் தலைமையில் திருப்பலிகள் நடைபெற்றது. அதன்பின்பு ஆலயம் முன்புள்ள கொடி கம்பத்தில் புனித அந்தோனியார் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். வருகிற 18-ந்தேதி திருவிழா கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடக்கின்றன.