புத்தக கண்காட்சி நடத்துவது குறித்த புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

புத்தக கண்காட்சி நடத்துவது குறித்த புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
x

வாலாஜாவில் புத்தக கண்காட்சி நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

வாலாஜாவில் புத்தக கண்காட்சி நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் புத்தக கண்காட்சி வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10 நாட்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. வாசிப்பாளர்கள், பொதுமக்கள் மாணவ -மாணவிகள் அதிகப்படியான புத்தகங்களை வாங்கி பயன்பெறும் வகையில் இந்த புத்தக கண்காட்சி வருகிற 9-ந் தேதி முதல் 10 நாட்கள் நடைபெற உள்ளது. இது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் பூங்கொடி, பாத்திமா, ராணிப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Next Story