போலீஸ்காரர் மீது தாக்குதல்


போலீஸ்காரர் மீது தாக்குதல்
x

ஒரத்தநாட்டில் ஏற்பட்ட தகராறில் ஒரு கும்பல் ஓட்டலை அடித்து சூறையாடினர். அப்போது தடுக்க முயன்ற போலீசாரையும் சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்

தஞ்சாவூர்

ஒரத்தநாடு, ஆக.11 -

ஒரத்தநாட்டில் ஏற்பட்ட தகராறில் ஒரு கும்பல் ஓட்டலை அடித்து சூறையாடினர். அப்போது தடுக்க முயன்ற போலீசாரையும் சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்

ஓட்டலில் தகராறு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தெற்குவீதியில் கருப்பையன் என்பவர் ஓட்டல் வைத்துள்ளார். இந்த கடைக்கு கண்ணந்தங்குடி மேலையூர் பகுதியைச் சேர்ந்த சரவணன், விக்ரமன் (வயது36) மற்றும் ஒரத்தநாட்டை சேர்ந்த தனசீலன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட சென்றனர். அப்போது கடையின் எதிரே கருப்பையாவின் மகன் ஓட்டி வந்த சைக்கிள் சரவணன் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடைக்குள் சென்ற சரவணன் உள்ளிட்டோர் கருப்பையாவின் மகனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். மேலும் தட்டிக்கேட்ட கருப்பையனையும், அவரது மனைவி சாந்தி (40) ஆகியோரையும் சரவணன் உள்ளிட்டோர் தாக்கி கடையை அடித்து உடைத்து சூறையாடினர்.

போலீஸ் மீது தாக்குதல்

அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் இருந்த ஒரத்தநாடு போலீஸ் நிலைய போலீஸ்காரர் கோபிநாத் (வயது32) தகராறில் ஈடுபட்ட சரவணனை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் ஏணி மரத்தால் போலீஸ்காரர் கோபிநாத்தை சரமாரியாக தாக்கி விட்டு, அவரது சட்டையை கிழித்து கீழே தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் கருப்பையாவின் மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனின் தம்பி சதீஷ் (31), விக்ரமன் (36), ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சரவணன், தனசீலன் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர். இதைப்போல போலீஸ்காரர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரிலும் ஒரத்தநாடு போலீசார் சரவணன் மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story