போலீஸ்காரர் மகனின் அறுவை சிகிச்சைக்கு ரூ.8½ லட்சம் வழங்கிய போலீசார்


போலீஸ்காரர் மகனின் அறுவை சிகிச்சைக்கு ரூ.8½ லட்சம் வழங்கிய போலீசார்
x

போலீஸ்காரர் மகனின் அறுவை சிகிச்சைக்கு ரூ.8½ லட்சம் வழங்கிய போலீசார் வழங்கினர்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் ராமச்சந்திரன். இவரது மகன் லலித் கிஷோர் (வயது 7). நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இருதயம் போன்ற உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தற்போது கடந்த 1½ ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் லலித் கிஷோருக்கு அறுவை சிகிச்சை செய்ய போதிய பொருளாதார வசதியின்மை காரணமாக, சமூக வலைதளங்களில் உதவி கேட்டு பதிவிடப்பட்டது. இதனை அறிந்த அரியலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் சமூக வலைதளம் மூலம் உதவி செய்தனர். இதன் மூலம் திரட்டப்பட்ட ரூ.8 லட்சத்து 39 ஆயிரத்து 500 உதவித்தொகைக்கான காசோலையினை லலித் கிஷோரின் அறுவை சிகிச்சைக்காகவும், மேலும் இதர மருத்துவ செலவுக்காகவும், அவரின் உடல்நலம் பூரண குணமடைய வேண்டியும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில், போலீஸ்காரர் ராமச்சந்திரனிடம் வழங்கப்பட்டது. அப்போது ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு மணவாளன், இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமாரி (தனிப்பிரிவு), பத்மநாபன் (ஆயுதப்படை), தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story