பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது - காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்


பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது - காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்
x

பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்புப் பணியின் போது காவலர்கள் கண்டிப்பாக செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும் முக்கியப் பணிகளின் போது உதவி ஆய்வாளர்களுக்கு கீழ் உள்ள காவலர்கள் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்துவதால், காவலர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. இதனால் பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story