கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம்


கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம்
x

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர்
சமீப நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கூடுதலாக ஒரு டோஸ்(பூஸ்டர்) செலுத்திக் கொள்ள கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கும்பகோணத்தில் நேற்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் தொடங்கியது. இதற்கு, கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் சு.ப. தமிழழகன் முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்த முகாம் பற்றி நகர்நல அலுவலர் பிரேமா கூறுகையில்,கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த கும்பகோணத்தில் ஒரே நேரத்தில் 25 இடங்களில் முகாம்கள் அமைத்துள்ளோம். இதில் முதல் மற்றும் இரண்டு கட்ட கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு 6 மாதங்கள் முடிந்த அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றார்.

பேராவூரணி

பேராவூரணி பேரூராட்சியில் கொரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த முகாமில் காலகம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சரண்யா மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.மேலும் மாவடுக்குறிச்சி ஊராட்சியிலும், தென்னங்குடி ஊராட்சியிலும் 100 நாள் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மாவட்ட கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி பொது மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் அறிவானந்தம், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர் நூர்ஜகான் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் நவநீதம் ஆறுமுகம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முதல் நாளான நேற்று 35 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.



Next Story