கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம்


கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம்
x

கொள்ளிடம் வட்டாரத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் உள்பட 30 இடங்களில் பொதுமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் அரசு மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அப்போது ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 2,867 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


Next Story