சேலம் மாவட்டத்தில் தொற்று அதிகரிப்பு 64 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் தொற்று அதிகரிப்பு  64 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 52 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று பாதிப்பு சற்று அதிகரித்தது. இதன்படி புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாநகராட்சி பகுதியில் 17 பேர், கொளத்தூர், எடப்பாடி, தலைவாசல் பகுதியில் தலா ஒருவர், வீரபாண்டியில் 2 பேர், ஓமலூரில் 5 பேர் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு வந்த 37 பேர் என மொத்தம் 64 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரத்து 208 பேர் பாதிக்கப்பட்டனர். 1 லட்சத்து 26 ஆயிரத்து 85 பேர் குணமடைந்தனர். தொற்று பாதிப்பால் இதுவரை 1,762 பேர் இறந்தனர்.


Next Story