தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அதிகரித்துள்ள கொரோனா..!! - ராதாகிருஷ்ணன் தகவல்


தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அதிகரித்துள்ள கொரோனா..!! - ராதாகிருஷ்ணன் தகவல்
x

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், "இந்தியாவில் இன்று 40 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கேரளா, மராட்டியா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் குறைவாக இருந்த நிலையில், தற்போது தொற்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. நேற்று தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 195 என பதிவாகி உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாகவே உள்ளது.

பிஏ4, பிஏ5 வகை உறுமாறிய கொகரோனா தொற்று புதிதாக பதிவாவது, 5வது அலை தொடங்கியது என்பதனை காட்டுகிறது. தமிழகத்தில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முகக்கவசம் அணிவது தேவை இல்லை என பலரும் நினைக்கிறார்கள். அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.


Next Story