கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - வழிகாட்டுதல்களை வெளியிட்ட கேரள சுகாதாரத் துறை


கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - வழிகாட்டுதல்களை வெளியிட்ட கேரள சுகாதாரத் துறை
x
தினத்தந்தி 2 April 2023 5:54 PM GMT (Updated: 2 April 2023 7:05 PM GMT)

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு வழிகாட்டுதல்களை அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் பிரத்யேக படுக்கைகள், சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு கொரோனா வந்தால் அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவாதம், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மாதிரிகளை டபிள்யூ.ஜி.எஸ் (WGS) சோதனைக்கு அனுப்புதல் ஆகியவற்றையும் வீணா ஜார்ஜ் வலியுறுத்தினார்.

நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிகுறிகள் இருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர் (RTPCR) சோதனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட எந்த நோயாளிக்கும் சிகிச்சை கிடைக்காத சூழ்நிலை இருக்கக்கூடாது என்றும் மேற்கூறிய வசதிகள் அனைத்து மருத்துவமனைகளிலும் வழங்கப்படுவதை மாவட்ட மருத்துவ அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story