கொரோனாவால் பெற்றோரை இழந்த 5 குழந்தைகளுக்கு ரூ.37½ லட்சம் நிதி உதவி அஞ்சலக கணக்கு புத்தகத்தை கலெக்டர் வழங்கினார்


கொரோனாவால் பெற்றோரை இழந்த  5 குழந்தைகளுக்கு ரூ.37½ லட்சம் நிதி உதவி  அஞ்சலக கணக்கு புத்தகத்தை கலெக்டர் வழங்கினார்
x

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 5 குழந்தைகளுக்கு பாரத பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் ரூ.37½ லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான அஞ்சலக கணக்கு புத்தகத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று வழங்கினார். நிதிஉதவி

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 5 குழந்தைகளுக்கு பாரத பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் ரூ.37½ லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான அஞ்சலக கணக்கு புத்தகத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று வழங்கினார்.

நிதிஉதவி

பிரதமர் நரேந்திர மோடி கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, பாரத பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண நிதி அஞ்சலக வைப்பு நிதியில் செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ்களை வழங்கும் பணியை காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக காணொலி காட்சி அரங்கில் இருந்து கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்து கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த 18 வயதிற்கு உட்பட்ட 5 குழந்தைகளுக்கு பாரத பிரதமரின் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தில் ரூ.37 லட்சத்து 54 ஆயிரத்து 650 வரவு வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ காப்பீட்டு அட்டை

பாரத பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தில் வழங்கப்பட்ட தொகைக்கான அஞ்சலக வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பி.எம்.கேர். சான்றிதழ் மற்றும் பிரதமரின் கடிதம் ஆகியவை அடங்கிய பெட்டகங்களை கொரோனா தொற்றினால் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த 5 குழந்தைகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களிடம் கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நன்னடத்தை அலுவலர் தேவகி, இளைஞர் நீதிக்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள், குழந்தைகள் இல்ல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story