கோவில்களில் கொரோனா கட்டுப்பாடுகள்? - அமைச்சர் சேகர்பாபு பதில்


கோவில்களில் கொரோனா கட்டுப்பாடுகள்? - அமைச்சர் சேகர்பாபு பதில்
x

கோவில்களில் கொரோனா கட்டுப்பாடுகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

திருச்சி,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 20 நாட்களில் 17 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் குறிப்பாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியான 2-ந் தேதி 2 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்காணித்து வருகிறார். கோவில்களில் கொரோனா கட்டுப்பாடுகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள், பாலூட்டும் தாய்மார்கள், 60 வயதை கடந்த மூத்தோர், உடல்நலம் குன்றியவர்கள் எப்போதும் போல் சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story