தினமும் 30 பேருக்கு கொரோனா பரிசோதனை


தினமும் 30 பேருக்கு கொரோனா பரிசோதனை
x

தினமும் 30 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

விருதுநகர்

சிவகாசி,

தமிழகத்தில் ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிவகாசி சுகாதார மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் 9 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் 30 பேரிடம் சளி மாதிரிகள் எடுக்கப்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களிடம் இருந்து இந்த மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாதிரியில் இதுவரை கொரோனா நோய் தொற்று கண்டறியப்படவில்லை. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.


Next Story