தென்காசி மாவட்டத்தில் 12-ந் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்
தென்காசி மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
தென்காசி
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் நடைபெற உள்ளது. தற்போது புதிதாக உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள 12 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் முதல் தவணை, இரண்டாவது தவணை மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவு பெற்றவர்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தி கொள்ளவும். பொதுமக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள மையங்களுக்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story