தேனி மாவட்டத்தில் 671 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்: நாளை மறுநாள் நடக்கிறது


தேனி மாவட்டத்தில் 671 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்:  நாளை மறுநாள் நடக்கிறது
x

தேனி மாவட்டத்தில் 671 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நாளை மறுநாள் நடக்கின்றன

தேனி

தேனி மாவட்டத்தில் 34-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மாவட்டத்தில் மொத்தம் 671 இடங்களில் இந்த முகாம்கள் நடக்கிறது. இதன் மூலம் 60 ஆயிரத்து 390 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் முன்னேற்பாடு பணிகள் மற்றும் முகாம் நடக்கும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் குறித்து கலெக்டர் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.


Next Story