ஈரோடு மாவட்டத்தில் 3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


ஈரோடு மாவட்டத்தில் 3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x

ஈரோடு மாவட்டத்தில் 3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு

ஈரோடு

தமிழகத்தில் கொரோனா 4-வது அலை பரவுவதை தடுக்கும் வகையில், மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில், ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள் உட்பட மொத்தம் 3 ஆயிரத்து 194 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம், இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. காலை முதலே தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வத்துடன் முகாம்களுக்கு வர தொடங்கினர்.

முகாமில், 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை, 2-வது தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. மேலும், ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியினையும் செலுத்திக்கொண்டனர். இதேபோல் அந்தியூரில் கொரோனா தடுப்பூசி முகாம் 180 மையங்களில் நடைபெற்றது. இதில் 930 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.


Next Story