ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்; இன்று நடக்கிறது


ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்; இன்று நடக்கிறது
x

ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா 4-ம் அலை பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உட்பட மொத்தம் 1,597 மையங்களில் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை செலுத்தி 6 மாதம் கடந்தவர்கள் அனைவருக்கும் முன் எச்சரிக்கை தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

1½ லட்சம் பேருக்கு...

இந்த முகாமில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 196 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 70 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது மிக வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.

எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ -மாணவிகள் எந்தவித அச்சமும் இன்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவின் 4-ம் அலையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.



Next Story