ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா 4-ம் அலையை தடுக்கும் வகையில் நேற்று தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிக்கூடங்கள் உள்பட 1,597 மையங்களில் நேற்று காலை 7 மணி முதல் தடுப்பூசி முகாம் தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது.
பூஸ்டர் தடுப்பூசி
முகாமில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 6 மாதங்கள் கடந்தவர்களுக்கு 3-ம் தவணை தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது.
தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 196 பணியாளர்கள் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டன.
பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் காலை முதல் ஆர்வமுடன் முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.